Home 13வது பொதுத் தேர்தல் பெக்கான் தொகுதியை விட்டு விலகுவது பற்றி கனவிலும் நினைத்ததில்லை – நஜிப்

பெக்கான் தொகுதியை விட்டு விலகுவது பற்றி கனவிலும் நினைத்ததில்லை – நஜிப்

466
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஏப்ரல் 4 – எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்போவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

“பெக்கான் தொகுதியை விட்டு விலகுவதை நான் கனவிலும் நினைத்ததில்லை. என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரையில், என் வாழ்வும், சாவும் அங்கே தான்” என்று பிரதமர் நஜிப் மிக உருக்கமான முறையில் இன்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி மற்றும் அம்னோவுடனான தலைமைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்வை விட்டு பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு,

#TamilSchoolmychoice

“ தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவது, அன்வாருக்கு அத்தனை பாதுகாப்பானதாகத் தோன்றியிருக்காது. காரணம் அன்வார் தனக்கு ஆதரவாக இருந்த அந்த தொகுதி மக்களுக்கு அரசியலுக்குள் வந்த பிறகு எதுவுமே செய்யவில்லை. தனக்கு ஆதரவாக இருக்கும் மக்களுக்கு உண்மையானவனாக இருப்பதே ஒரு தலைவனின் கடமை. அதான் அரசியல் கொள்கையும் கூட. அதை விடுத்து, வெற்றி மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுவது அரசியல் அல்ல” என்று நஜிப் தெரிவித்தார்.

நஜிப் 1976 ஆம் ஆண்டு, தனது தந்தையும், முன்னால் பிரதமர் மற்றும் பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துன் அப்துல் ரசாக் ஹுசைனின் மறைவிற்குப் பிறகு, பெக்கான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.