Home உலகம் மனித ‘மூளை’ ஆராய்ச்சிக்கு 100 மில்லியன் டாலர் ஒதுக்கிய ஒபாமா

மனித ‘மூளை’ ஆராய்ச்சிக்கு 100 மில்லியன் டாலர் ஒதுக்கிய ஒபாமா

632
0
SHARE
Ad
obamaவாஷிங்டன், ஏப்.4-  மனித ‘மூளை’ பற்றிய ஆராய்ச்சிக்கு 100 மில்லியன் டாலர் ஒதுக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் பராக் ஒபாமா உரையாற்றினார்.
அப்போது நிகழ்ச்சியில் ஒபாமா கூறியதாவது,’ மூளையின் செயல்பாடுகள் மர்மமானது. அதனை கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி, மூளையின் செயல்பாடுகள் மற்றும் நாம் எவ்வாறு சிந்திக்கிறோம், கற்றுக்கொள்கிறோம், நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பது போன்ற விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டறிய தேவையான வசதிகளை வழங்கும்.
இந்த ஆராய்ச்சிகள், மூளை தொடர்பான நோய்களை கண்டுபிடிக்க, குணப்படுத்த, தடுக்க விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும். ‘பிரைன் இனிசியேடிவ்ஸ்’ என்று பெரிடப்பட்ட இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும்’ என அவர் கூறினார்.
இந்த ஆராய்ச்சிகளை அமெரிக்க அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டாக மேற்கொள்ள உள்ளது. மூளையில் உள்ள செல்கள் மற்றும் நரம்புகள் நமது சிந்தனை வேகத்தை தூண்டுவதற்கு எவ்வாறு செல்படுகிறது என்பதைக் கண்டறிவதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.