Home One Line P2 முகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ

முகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ

1140
0
SHARE
Ad

மும்பை – தங்களின் குழும நிறுவனங்களின் முதலீடுகளை 76 பில்லியன் டாலர் வரை கடந்த 5 ஆண்டுகளில் உயர்த்தியிருக்கிறது முகேஷ் அம்பானியின் (படம்) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம்.

இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் அதிகமான கடன்களைக் குறைக்கும் நடவடிக்கையில் தற்போது ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது. அடுத்த 18 மாதங்களில் கடன்களே இல்லாத நிறுவனமாக உருவெடுக்கும் இலக்கை ரிலையன்ஸ் கொண்டுள்ளது.

தற்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கும் முகேஷ் அம்பானி கடன்களைக் குறைக்கும் தனது இலக்கை அடைவதற்காக தனது நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யவும் முன்வந்துள்ளார். அதில் முதல் கட்டமாக முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கவிருப்பது சவுதி அரேபியாவின் பெட்ரோலிய நிறுவனமான அராம்கோ. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அராம்கோ 75 பில்லியன் டாலர் முதலீட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 20 விழுக்காட்டுப் பங்குகளை வாங்குவதற்கு முன்வந்துள்ளது.

#TamilSchoolmychoice

உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றையும், பெட்ரோலிய இராசயனத் தயாரிப்பு நிறுவனங்களையும் ரிலையன்ஸ் தனது குழுமத்தில் கொண்டுள்ளது.

அதே வேளையில் தனது சில்லறை வணிக வியாபாரத்தையும், தொலைத் தொடர்பு வணிகங்களையும் அடுத்த 5 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிட ரிலையன்ஸ் முனைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுக் கூட்டத்தில் இந்த விவரங்களை ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.