Home One Line P1 ஜாகிர் நாயக்கின் குடியுரிமை பரிசீலனையில் உள்ளது!

ஜாகிர் நாயக்கின் குடியுரிமை பரிசீலனையில் உள்ளது!

652
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவில் பிறந்த இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தர குடியுரிமை குறித்து மலேசிய உள்துறை அமைச்சு பரிசீலித்து வருவதாக அமைச்சின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் சைம்ஸ் நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் ஜாகிர் நாயக் இனி மலேசியாவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார் என்று அமைச்சரவை முடிவு செய்ததை அடுத்து, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிக்கை வெளியிட உள்ளதாகவும், மேலும், அவர் நாடுகடத்தப்படுவாரா என்று குறிப்பிடப்படவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.

டாக்டர் ஜாகிருக்கு தேசிய முன்னணி ஆட்சியின் போது கடந்த 2015-இல் மலேசிய நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மலேசிய முஸ்லீம்கள் இடையே பெரிதும் பிரபலமான இஸ்லாமிய போதகரான ஜாகிர், சிறுபான்மை இனமான இந்தியர்களிடமிருந்தும், சீனர்களிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்க்கொண்டார். அவர்களுக்கு எதிரான அழற்சி கருத்துக்களுக்காகவும் அவர்களின் மத நம்பிக்கைகளுக்காகவும் அவர் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று கோத்தா பாருவில் ஒரு சொற்பொழிவின் போது, அவரது சமீபத்திய கருத்துக்கள் தொடர்பாக 115 பொது புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டன. நாட்டின் அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே கருத்துகளை வெளியிட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 504-வது பிரிவின் கீழ் மத்திய காவல் துறை தற்போது அவரை விசாரித்து வருகிறது.