Home One Line P2 ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ‘நொ டைம் டு டை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ‘நொ டைம் டு டை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

823
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தொடரில் அடுத்த வருடம் வெளிவர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து இராணுவத்தில பணிபுரிந்த ஐயன் பிளெமிங் தன்னுடைய இராணுவ அனுபவங்களை மையப்படுத்தி உருவாக்கிய துப்பறியும் உளவாளி பாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட்.

1962-இல் முதல் முறையாக டாக்டர் நோ படத்தின் மூலம் சினிமாவில் இந்தக் கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 50 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் இந்தப் படத்தொடர் பிரபலமாக உள்ளது. மிக நீண்ட காலம் நீடிக்கும் உலகின் படத்தொடராக விளங்குவது ஜேம்ஸ் பாண்ட்

#TamilSchoolmychoice

இதுவரையிலும் சீன் கானரி முதல் டேனியல் கிரேக் வரை ஒன்பது பேர் இந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளனர். இறுதியாக டேனியல் கிரெக் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றுள்ளார். அடுத்த படத்திலிருந்து வேறு நபர் இந்தப்பாத்திரத்தை ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் பெயர் நொ டைம் டு டை (No time to Die) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.