Home One Line P1 “ஜாகிர் நாயக் எதிர்ப்புக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!”- காவல் துறை

“ஜாகிர் நாயக் எதிர்ப்புக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!”- காவல் துறை

665
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘ஜாகிர் நாயக் தேவையில்லை, இந்தியர்கள் மற்றும் பிற இனங்களுக்கு சம உரிமைகள்குழுவின் அமைப்பாளர்களிடமிருந்து கடிதம் பெற்றதாகத் தெரிவித்த காவல் துறையினர், அந்த அறிவிப்பு முழுமையானதால்ல என்றும் சட்ட தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, மக்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக பொது மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்என்று பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 7 மணிக்கு லிட்டில் இந்தியா, பிரிக்பீல்ட்ஸ் நகரில் பேரணியை நடத்தும் நோக்கில் அந்த அறிவிப்பு இருந்ததாக அவர் கூறினார். கொடுக்கப்பட்ட அறிவிப்பு முழுமையடையாததால், இந்தக் கூட்டத்தில் மக்கள் கலந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அரிபாய் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இதன் ஏற்பாட்டாளரான சங்கர் கணேஷ் கூறுகையில், இந்த பொதுக் கூட்டம் பிரச்சனைகள் இல்லாமல் தொடரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

பேரணி தொடரும். நாங்கள் இன்று (நேற்று வியாழக்கிழமை) புத்ராஜெயாவில் கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சாமாட்டை சந்தித்தோம். இந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எங்கள் மனுவை ஏற்க அவர் ஒப்புக் கொண்டார்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த சந்திப்பு குறித்து தனக்குத் தெரியாது என்றும் அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் காலிட்டின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளார்.