Home One Line P2 சந்திராயன் 2: நிலவின் மேற்பரப்பு, பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது!

சந்திராயன் 2: நிலவின் மேற்பரப்பு, பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது!

898
0
SHARE
Ad
படம்: நன்றி இஸ்ரோ

புது டில்லி: சந்திரயான் 2 செயற்கைகோளின் நிலப்பரப்பு படமிடும் கேமரா 2 எடுத்த சந்திரனின் மேற்பரப்பு மற்றும் அதன் பள்ளங்களின் புதிய புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ நேற்று திங்கட்கிழமை வெளியிட்டது.

இஸ்ரோவின் தகவலிம்படி, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று ஜாக்சன் (Jackson), மித்ரா (Mitra), மாக் (Mach) மற்றும் கொரோலெவ் (Korolev) போன்ற தாக்கக் பள்ளங்களைக் காட்டும் படங்கள் சுமார் 4,375 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

ஜாக்சன் என்பது சந்திரனின் வெகு தொலைவில் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு தாக்க பள்ளம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மாக் பள்ளத்தின் மேற்கு வெளிப்புற விளிம்பில் அமைந்துள்ளது. மித்ரா 92 கி.மீ விட்டம் என்னும் மற்றொரு தாக்க பள்ளமும் உள்ளது.

#TamilSchoolmychoice

இந்திய இயற்பியலாளராக இருந்த பேராசிரியர் சிசிர் குமார் மித்ரா அவரின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

படத்தில் காணப்படும் கொரோலெவ் (Korolev) பள்ளம் 437 கி.மீ அகலமுள்ள பள்ளமாகும், இது மேலும் பல சிறிய அளவிலான பள்ளங்களைக் கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி சோமர்பெல்ட் (Sommerfeld) மற்றும் கிர்க்வுட் (Kirkwood) போன்ற தாக்க பள்ளங்களைக் காட்டும் படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது.