Home One Line P2 விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு அமோக வரவேற்பு, 8 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது!

விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு அமோக வரவேற்பு, 8 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது!

844
0
SHARE
Ad

சென்னை: பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பாடல் ‘வெறித்தனம்’. வெளியான இரண்டு நாட்களில் சுமார் 8 மில்லியன் பார்வையாளார்களை இப்பாடல் பெற்றுள்ளது.  

முன்னதாக, ஏ.ஆர்.ரகுமான், விஜய், அட்லி, பாடலாசிரியர் அனைவரும் அமர்ந்து பாடலுக்கான டியூன் போடும் காணொளியை இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டிருக்கிறார். அந்த காணொளி இரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம்பிகில்‘ . இப்படத்தில் விஜய்க்கு இணையாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, விவேக், கதிர், இன்னும் பலர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பெண்கள் காற்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் விஜய் காற்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெறும் சிங்கப்பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில், ‘வெறித்தனம்’ பாடலைக் காணலாம்: