Home One Line P1 “அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியிடப்பட்டதற்கு நான் காரணமல்ல!”- அன்வார்

“அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியிடப்பட்டதற்கு நான் காரணமல்ல!”- அன்வார்

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது துணைத் தலைவர் அஸ்மின் அலியை சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கைக் காணொளிகள் வெளியானதில் தமக்கு சம்பந்தம் உள்ளது எனும் குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

நான் சம்பந்தப்படவில்லை, நான் இதில் ஈடுபட விரும்பவில்லைஎன்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று முன்னதாக, வாட்சாப் செய்தித் தளத்தில் இரண்டு ஆண்கள் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஆறு காணோளிகள் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆறு காணொளிகள் மூன்று நிமிடங்களாக பிரிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைக்கப்பட்ட அதே செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பொருளாதார விவகார அமைச்சராக இருக்கும் அஸ்மின், இந்த காணோளிகள் தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மோசமான பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்று கூறியிருந்தார். இது உட்கட்சி வேலை என்று அவர் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார்.