Home One Line P1 மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் ஒற்றை கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்!

மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் ஒற்றை கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்!

724
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒற்றை கல்வி முறை ஆலோசனையை விரிவுப்படுத்துமாறு அம்னோ உச்சமட்டக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி குரல் கொடுத்துள்ளார். இனியும், மலேசியக் குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

தெங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் கருத்துகளை அவர் மீண்டும் எதிரொலித்தார். இது மலேசிய மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதாக ரஸ்லான் கூறினார்.

மலேசியா நீண்ட காலமாக கல்வி முறையால் பிளவுபட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பின்னர் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​ தெங்கு இஸ்மாயில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியிட்ட காணொளியை மையமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டதாக ரஸ்லான் தெரிவித்தார்.

தெங்கு இஸ்மாயிலின் தந்தை, ஜோகூர் சுல்தான், 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் பல நேர்காணல்களில், ஒற்றை கல்வி முறையை நிறுவ வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இவ்வகையான பள்ளிகள் தேசிய ஒற்றுமையை வளர்க்க உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத்திற்கு கல்வி விவகாரத்தில் மத்திய அரசு சுயாட்சியை வழங்குவதோடு, அவர்களுக்கு ஒற்றை கல்வி முறையை செயல்படுத்த நிதி மற்றும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இது எவ்வாறு செயல்படுகிறது என நாம் பிறகு கவனிக்கலாம்” என்று ரஸ்லான் கூறினார்.

மத்திய அரசின் பிரபலம் இதனால் சரிவடையும் என்ற அச்சத்தில் இருக்கும் வரை, மலேசியர்களுக்கு சரியான தேசிய உணர்வு இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

எல்லா தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு நிச்சயம் இருக்கும், ஆனால் அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு தைரியம் இருக்க வேண்டும். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. மலேசியாவில் இனப் பிரச்சனைகள் தொடர்ந்து உள்ள நிலையில், புதிய மலேசியாவை வளர்த்து வருவதாக அறிவிப்பதில் அர்த்தமில்லைஎன்று அவர் கூறினார்.