Home One Line P1 ஜாகிர் நாயக்: இராமசாமி, சதீஸ் செப்டம்பர் 11 வாக்குமூலம் அளிப்பர்!

ஜாகிர் நாயக்: இராமசாமி, சதீஸ் செப்டம்பர் 11 வாக்குமூலம் அளிப்பர்!

649
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் குறித்த கருத்துகள் தொடர்பாக இரண்டு ஜசெக பிரதிநிதிகள் தங்களின் வாக்குமூலத்தை நாளை புதன்கிழமை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் அமானைச் சேர்ந்த காவல் துறையினர் நாளை பெராய் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் பி. இராமசாமி, பாகான் சட்டமன்ற உறுப்பினருமான சதீஸ் முனியாண்டி ஆகியோரை புக்கிட் அமான் காவல் துறையினர் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தம்மீதும், சட்டமன்ற உறுப்பினர் மீதும் இரண்டு காவல் துறை புகாரை ஜாகிர் நாயக் பதிவு செய்துள்ளதாக இராமசாமி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், விசாரணைக்கு உதவ காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக சதீஸ் கூறினார்.

நாங்கள் காவல் துறையினரிடமிருந்தோ அல்லது மலேசியாவிலிருந்தோ ஓட மாட்டோம். எங்கள் நாட்டிலுள்ள சட்டத்தை எதிர்கொள்வோம்என்று அவர் கூறினார்.

அடுத்த வாரம் தொடங்கி ஜாகிர் நாயக்கின் புகார் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஹுசிர் முகமட் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

அவர்கள் மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன், முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு மற்றும் எம்.சத்தீஸ் ஆவர். அவதூறு குற்றச்சாட்டுக்காக கடந்த மாதம் ஜாகிர் அவர்கள் மீது புகார் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.