Home One Line P1 அரசியலமைப்பில் ‘இஸ்லாம்’ என்ற சொல் மட்டுமே உள்ளது, சன்னி அல்லது ஷியா என்று குறிப்பிடப்படவில்லை!

அரசியலமைப்பில் ‘இஸ்லாம்’ என்ற சொல் மட்டுமே உள்ளது, சன்னி அல்லது ஷியா என்று குறிப்பிடப்படவில்லை!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹிஷாமுடின் யூனுஸ், சியா முஸ்லிம்களை தடுத்து வைத்திருப்பது தவறு என்று கூறியுள்ளார். நாட்டின் மத்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவில் இஸ்லாத்தின் எந்த கிளை அதிகாரப்பூர்வமானது என்று குறிப்பிடாததை அவர் சுட்டிக் காட்டினார்.

நான் இந்த விவகாரத்தை ஒரு முன்னாள் நீதிபதியாக, ஒரு சட்ட கண்ணோட்டத்தில் அணுகுகிறேன். முதலாவதாக, மத்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவு, இஸ்லாம் கூட்டமைப்பின் மதமாக இருக்கும் என்றும் பிற நம்பிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் கூறுகிறது. அங்குஇஸ்லாம்என்ர சொல் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுசன்னி இஸ்லாம்என்று சொல்லவில்லை, அல்லதுசியா இஸ்லாம்என்று சொல்லவில்லை, அது வெறும் இஸ்லாம்என்று கூறுகிறது.” என்று அவர் மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் இவ்வாறு பேசினார். 

சுஹாகாமில் உறுப்பினராக இருக்கும் ஹிஷாமுடின், அண்மையில் கோம்பக்கில் நடந்த ஒரு சோதனையில் சிலாங்கூர் இஸ்லாமிய மத அமைப்பு (ஜாய்ஸ்) நடத்திய சோதனையில் 23 பேர் கைது செய்யப்பட்டது குறித்து சுஹாகாம் விமர்சித்ததற்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.