Home One Line P1 காட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது!

காட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது!

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தோனிசிய அதிகாரிகள் மலேசிய நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றியுள்ளனர். ரியாவில் அமைந்துள்ள அந்நிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீதான் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்படக் காரணம் என்று செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடி அடெ தோட்ட நிறுவனத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்ததாக அது கூறியுள்ளது. வேண்டுமென்றே காட்டுத்தீயை இந்த நிறுவனம்தான் தொடங்கியது என்று சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் அமைச்சர் சித்தி நூர்பாயா பாகார் கூறுகையில், அந்நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பகுதியை மலேசியாவை தளமாகக் கொண்ட ஒரு தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தீயைத் தொடங்கிய அந்த மலேசிய நிறுவனத்தை நாங்கள் சோதித்தோம். அதன் நிலம் செப்டம்பர் 11-இல் கைப்பற்றப்பட்டதுஎன்று அவர் இந்தோனிசிய சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அனைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களின் நிலப் பகுதிகள் தீப்பிடித்து எரிந்து வருவதை சரிபார்க்குமாறு அமைச்சின் அமலாக்கப் பிரிவுக்கு சித்தி நூர்பாயா உத்தரவிட்டுள்ளார்.

மலேசியாவில் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டு தீ என்பதை சித்தி நூர்பாயா ஏற்க மறுத்தார். மாறாக அது சரவாக்க்கிலிருந்து தோன்றியது என்ற தனது முந்தைய கருத்தை விளக்கிய அமைச்சர், கடந்த செப்டம்பர் 3 மற்றும் 8-க்கு இடையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி இவ்விசயம் தெரிவிக்கபட்டதாகக் கூறினார்.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் இந்த கருத்தினை நிராகரித்தார்.

ஆசியான் சிறப்பு வானிலை மையம் பதிவு செய்த மொத்த வெப்பப் பகுதிகளின் சமீபத்திய தரவை இயோ மேற்கோள் காட்டினார். அதில் கலிமந்தானில் 474 பகுதிகளும், சுமத்ராவில் 387 பகுதிகளும் வெப்பப் பகுதிகளாக இருப்பதை இயோ குறிப்பிட்டிருந்தார்.