Home One Line P2 புர்ஜ் கலீஃபாவைப் போன்ற 2 பெரிய சிறுகோள்கள் பூமியைக் கடக்க உள்ளன- நாசா

புர்ஜ் கலீஃபாவைப் போன்ற 2 பெரிய சிறுகோள்கள் பூமியைக் கடக்க உள்ளன- நாசா

701
0
SHARE
Ad

வாஷிங்டன்: சிறிய கிரகங்கள் எனக் கூறப்படும் இரண்டு பிரம்மாண்டமான சிறுகோள்கள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 14) பூமியைக் கடந்து பறக்கும் என்று நாசா எச்சரித்துள்ளது.

இவ்விரண்டு பிரம்மாண்டமான சிறுகோள்களும் 2000 கியூடபிள்யூ 7 (2000 QW7) மற்றும் 2010 CO1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 கியூடபிள்யூ 7 எனும் சிறுகோள் புர்ஜ் கலீஃபாவின் அளவு (துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடம்) இருப்பதாகவும்,  செப்டம்பர் 14-ஆம் தேதியன்று பூமிக்கு அருகில் பறக்க உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 2000 கியூடபிள்யூ 7 தோராயமாக 290 முதல் 650 மீட்டர் அகலம் கொண்டது.

#TamilSchoolmychoice

பூமியை நெருங்குவது இந்த சிறுகோளுக்கு இதுவே முதல் முறை அல்ல. முன்னதாக, 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி பூமியை இந்த சிறுகோள் அணுகியது.

பூமியைக் கடக்க இருக்கும் மற்றொரு சிறுகோள் 2010 CO1 என்று கண்டறியப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, 2000 கியூடபிள்யூ 7 சிறுகோள் பூமியைக் கடந்து செல்லும் முதல் சிறுகோள் ஆகும்.

நாசாவின் கூற்றுப்படி, சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வரும் சிறிய பாறை பொருட்கள் என்று கூறப்படுகின்றன. அவை கிரகங்களைப் போலவே சூரியனைச் சுற்றி வந்தாலும், கிரகங்களை விட சிறுகோள்கள் அளவில் மிகச் சிறியவை.