Home One Line P1 திறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு!- குலசேகரன்

திறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு!- குலசேகரன்

665
0
SHARE
Ad

கூச்சிங்: மலேசியாவில் 35 விழுக்காடு திறமையான தொழிலாளர்களின் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒத்துழைக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும், ஈரானுடன் ஒத்துழைப்பைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் திறமையான பணியாளர்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் நாம் ஈரானுக்குச் செல்கிறோம். அவர்களிடம் என்ன திறமைகள் உள்ளன என்பதைக் கற்றுக் கொள்ள உள்ளோம். 11-வது மலேசியா திட்டத்தில் (ஆர்எம்11), நாடு 35 விழுக்காடு திறமையான தொழிலாளர்கள் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும், இருப்பினும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, திறமையான தொழிலாளர்கள் எனும் இலக்கை நாம் 30 விழுக்காடு மட்டுமே எட்டியுள்ளோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை (டிவிஇடி) வலுப்படுத்தும் முயற்சியில் அதிகமான டிவிஇடி நிறுவனங்களை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்று குலசேகரன் கூறினார்.

ஒரு நாட்டின் செழிப்பில் திறன்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதன் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கணிசமான பகுதியினர் பயிற்சியளிக்கப்படாவிட்டால் எந்த நாடும் சிறப்பாக முன்னேறாது, எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடைய முடியாதுஎன்று அவர் கூறினார்.

திறமையான பணியாளர்களைக் கொண்டிருப்பது உற்பத்தித்திறன் மற்றும் இயக்கத்தை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார்