Home One Line P1 புகை மூட்டம்: 57 பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன!

புகை மூட்டம்: 57 பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன!

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலா லங்காட் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் ஐம்பத்தேழு பள்ளிகள் இன்று திங்கட்கிழமை காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு குறியீடு (ஏபிஐ) 200-க்கும் மேல் பதிவானதால் இந்த எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 68,025 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் கல்வித் துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஜோஹான் செத்தியா பகுதியில் காற்று மாசுபாடு 200-க்கும் மேற்பட்ட ஏபிஐ அளவீட்டை பதிவு செய்துள்ளது.

100-க்கும் மேல் ஏபிஐ பதிவுகளைக் கொண்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, நிருவாகிகள் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்தவும், வெளிப்புற விளையாட்டு மற்றும் கொண்டாட்டங்களை ஒத்திவைக்கவும் நினைவூட்டப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட புகை மூட்டம் காரணமாக பள்ளி மூடல் குறித்த நிலையான இயக்க முறையை (எஸ்ஓபி) துணையாகக் கொள்ள நினைவூட்டப்படுகின்றன.

இதற்கிடையில், கோலாலம்பூரில் கடந்த செப்டம்பர் 19 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் மூடப்பட்ட அனைத்து 296 பள்ளிகளும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் இயங்கும் என்று கல்வி அமைச்சகம் ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.