Home One Line P1 புகை மூட்டம்: காற்றின் தரம் மேன்மையடைந்து வருகிறது!

புகை மூட்டம்: காற்றின் தரம் மேன்மையடைந்து வருகிறது!

810
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் இன்னும் மோசமாக இருந்த போதிலும், நாடு தழுவிய காற்று மாசு குறியீட்டு அளவீடுகள் நள்ளிரவு 12 உடன் ஒப்பிடும்போது காலை 7 மணிக்கு சரிவைக் கண்டுள்ளன.

மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (ஏபிஐஎம்எஸ்) கூற்றுபடி, சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியாவில், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மிகவும் ஆரோக்கியமற்ற ஏபிஐ (203) பதிவு செய்திருந்தது. ஆயினும், இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரோக்கியமற்ற பிரிவில் குறைந்த (168) அளவீட்டை பதிவு செய்துள்ளது.

சரவாக்கின் அனைத்து பகுதிகளிலும் காற்றின் தரம் சராசரியாக மேன்மையடைந்து வருகிறது. கல்வி அமைச்சகம் நேற்று ஓர் அறிக்கையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும் ஏதேனும் மாற்றங்கள் அல்லது புதுப்பிப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியிருந்தது.