Home One Line P1 “மகாதீருக்கு பிறகு அன்வார் ஒருவரே பிரதமர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வோம்!”- இராமசாமி

“மகாதீருக்கு பிறகு அன்வார் ஒருவரே பிரதமர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வோம்!”- இராமசாமி

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எப்போது பிரதமராக வருவார் என்பது குறித்து குறிப்பிட்ட தேதிகள் இல்லை என்று பிரதமரின் ஊடக ஆலோசகர் அப்துல் காடிர் ஜாசின் கூறுவதில் தவறில்லை.

ஆனால், வேண்டுமனே 2020, 2030 அல்லது 2050-ஆக கூட இருக்கலாம் என்று கூறி இந்த விவகாரத்தை மேலும் விரிவுபடுத்தியது தவறு என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி சாடியுள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், மகாதீர் இடைக்கால பிரதமராக வருவார். அவர் மன்னரைச் சந்தித்து அன்வாரிடம் அப்பதவியை ஒப்படைப்பார். அது ஒரு நியாயமான காலக்கெடுவிற்குள் நடக்கும்” என்று இராமசாமி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் எந்த நேரமும் குறிப்பிடப்படவில்லை என்றும், சில மாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அது இரண்டு வருடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

சமீபத்தில், அன்வார் 2020-இல் பிரதமராக வருவார் என்று பரிந்துரைத்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மகாதீர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார், ஆயினும் அது குறித்த தேதி பிறகு அறிவிப்பதாகக் கூறியிருந்தார். சூழ்நிலைகள் இவ்வாறு இருக்க காடிர் ஏன் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த பிரச்சனை ஏற்படுமாறு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலின்போது, நான்கு அரசியல் கட்சிகளும் அம்னோ மற்றும் தேசிய முன்னணியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக ஒரு வரலாற்று கூட்டணியில் ஒன்றிணைந்தன. அன்வார் அப்போது சிறையில் இருந்ததால், நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமராக இருப்பதற்கான இயல்பான மற்றும் சரியான தேர்வாக மகாதீர் இருந்தார். மகாதீர் மற்றும் அன்வார் ஆகிய இரு நபர்களுக்கிடையிலான உறவு மிகச் சிறந்ததாக இருந்தது. யூகங்கள் பெருகுவதற்காக அவருக்குப் பின் மகாதீர் யாரையும் மனதில் வைத்திருப்பதாக நான் நினைக்கவில்லை. மகாதீருக்கு பிறகு ஒருவரே பிரதமராக முடியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வோம், அது வேறு யாருமல்ல அன்வார்என்றி இராமசாமி குறிப்பிட்டிருந்தார்.