Home One Line P2 நாசா: விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை!

நாசா: விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை!

815
0
SHARE
Ad
படம்: நன்றி நாசா டுவிட்டர் பக்கம்

புது டில்லி: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் செய்து வந்த நிலையில், அது பயனளிக்காமல், கடந்த சனிக்கிழமையுடன் அதன் ஆயுட்காலமும் முடிந்தது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள வேண்டிய ஆயுட்காலமாக 14 நாட்கள் கணக்கிடப்பட்டிருந்தது.

இதனிடையே, தகவல் தொடர்பு கிடைக்காமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா அறிவித்துள்ளது

இது தொடர்பாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவினை ஆய்வு செய்யும் எங்களின் ஆர்பிட்டர் மூலம் இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தினை புகைப்படம் எடுத்தது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில், லேண்டர்இருக்கும்இடத்தைகண்டுபிடிக்கமுடியவில்லை”என்று குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அக்டோபரில் வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்பதால், நிலவின் சுற்றுப்பாதையிலிருந்து மீண்டும் படமெடுக்க நாசா விண்கலம் முயற்சிக்கும் என்று அது தெரிவித்துள்ளது.