Home One Line P1 எக்ஸ்சேஞ்ச் 106 நாட்டின் உயரமான கட்டிடமாக செயல்பட தயாராகிறது!

எக்ஸ்சேஞ்ச் 106 நாட்டின் உயரமான கட்டிடமாக செயல்பட தயாராகிறது!

955
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தென்கிழக்காசியாவின் மிக உயரமான (492 மீட்டர்)  கட்டிடமான எக்ஸ்சேஞ்ச் 106 இப்போது பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது.

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் 452 மீட்டர் உயரத்தில் மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது வந்ததை, தற்போது எக்ஸ்சேஞ்ச் 106 அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது.

தென்கிழக்காசியாவின் மிக உயரமான கட்டிடத்தைக் கொண்டிருந்த வியட்நாமின் 469.5 மீட்டர் உயரமுள்ள லேண்ட்மார்க் 81 திட்டத்தையும் இது முறியடித்து தற்போது, இப்பகுதியின் உயரமான கட்டிடமாக திகழ்கிறது.

#TamilSchoolmychoice

எக்ஸ்சேஞ்ச் 106 அலுவலகத் தொகுதி கோலாலம்பூரில் அமைக்கப்படவிருக்கும் நிதி நகரமான துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (Tun Razak Exchange) அல்லது டிஆர்எக்ஸில் (TRX) அமைந்துள்ளது.  இது  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 1எம்டிபி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. டிஆர்எக்ஸ் என்பது முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் கனவுத் திட்டமாகும்.  மேலும் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் ரசாக் ஹுசைன் எனும் அவரது தந்தையின் பெயர் இப்பகுதிக்குப் பெயரிடப்பட்டது.

எக்ஸ்சேஞ்ச் 106 மற்றும் டிஆர்எக்ஸ் இப்போது இந்தோனிசிய மேம்பாட்டாளரான முலியா ப்ரோபெர்டி மற்றும் மலேசிய நிதி அமைச்சிற்கு சொந்தமானவையாகும்.

1998-இல் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டபோது, ​​88 மாடி அலுவலக கோபுரங்களான இது உலகின் மிக உயரமான கட்டிமாக இருந்தது.

1981 முதல் 2003 வரை துன் மகாதீர் முகமட் பிரதமராக இருந்த காலத்தில் இந்த இரட்டை கோபுரக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இன்று அவர் மீண்டும் பிரதமராக உள்ளார்.

ஆனால், எக்ஸ்சேஞ்ச் 106 அதன் உயரமான உரிமையை விரைவில் இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அக்கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து நெருங்கிய தொலைவில், 500 மீட்டர் உயரமுள்ள மெர்டேகா பிஎன்பி 118 (Merdeka PNB 118) கட்டிடம் முடிப்பெறும் நிலையில் உள்ளது.

இதனை பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இது தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.