Home One Line P2 மோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக்...

மோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக் காட்சிகள் 2)

1407
0
SHARE
Ad

மகாபலிபுரம் – இங்கு அமைந்துள்ள – பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கும் – மாமல்லபுரத்துச் சிற்பங்கள் ஏற்கனவே உலகப் புகழ் பெற்றவைதான்!

ஐக்கிய நாட்டு மன்றத்தால் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட புராதன மையம்தான் மாமல்லபுரம். ஏற்கனவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளை ஈர்த்துவரும் சுற்றுலாத் தளம்தான்.

ஆனால், நேற்று ஒரே நாளில் இத்தனை பிரபலத்தையும், புகழையும் மாமல்லபுரச் சிற்பங்கள் உலகம் முழுவதிலும்  சென்றடைந்ததுபோல் இத்தனை ஆண்டுகளில் நடந்திருக்குமா என்றால் இல்லை என்ற பதில்தான் வரும்.

#TamilSchoolmychoice

சீனா, இந்தியா என இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகை இரண்டரை பில்லியன் என்ற நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடத்தியதும், ஜின் பிங்கிற்கு மாமல்லபுரச் சிற்பங்களின் தொன்மை, அழகியல், போன்ற அம்சங்களை மோடி நேரடியாக விளக்கிச் சொன்ன காட்சிகளும், இரண்டு நாடுகளிலும் மற்றும் உலகம் எங்கும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்திருக்கிறது மாமல்லபுரச் சிற்பங்களின் பெருமைகள்!

கடற்கரைக் கோயில் வளாகத்தில் இரு தலைவர்களும் தமிழ்நாட்டின் இளநீர் பருகிக் கொண்டே உரையாடிய காட்சிகள் வித்தியாசமானதாக இருந்தன.

வழக்கமான இருநாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பு போல் அல்லாமல், கலாச்சார ரீதியிலும், மற்ற அம்சங்களிலும் இதுவரை காணாத அளவுக்கு மாறுபட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாமல்லபுரத்தின் பெருமைகளையும் சிற்பங்களின் பின்புலங்களையும் அவற்றைப் பற்றி நன்கறிந்த ஒருவர் விளக்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, மோடியே அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு ஜின்பிங்கிற்கு விளக்கியது ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

மோடியும் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தைச் சுற்றிப் பார்த்த காட்சிகளை இங்கே காணலாம்:

-செல்லியல் தொகுப்பு (படங்கள் நன்றி: நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்)