Home One Line P2 நெட்பிலிக்ஸ் : 6.8 மில்லியன் புதிய சந்தாதாரர்கள்

நெட்பிலிக்ஸ் : 6.8 மில்லியன் புதிய சந்தாதாரர்கள்

807
0
SHARE
Ad

லோஸ் கேதோஸ் (கலிபோர்னியா) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லோஸ் கேதோஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள நெட்பிலிக்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள 3-வது காலாண்டுக்கான கணக்கறிக்கையில் தனது கட்டணம் செலுத்தும் இணைய சேவையில் மேலும் 6.8 மில்லியன் சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளனர் என அறிவித்துள்ளது.

எனினும், இந்த காலகட்டத்தில் தனது இலக்காக நிர்ணயித்துள்ள 7 மில்லியன் புதிய சந்தாதாரர்களை எட்டுவதற்கு இன்னும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலான 200,00 வாடிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர்.

உலகம் முழுவதிலும் 158.3 மில்லியன் எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை நெட்பிலிக்ஸ் தற்போது கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டவுடன் பங்குச் சந்தையில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலைகள் 10 விழுக்காடு உயர்ந்தன.

அடுத்த காலாண்டில் மேலும் 7.6 மில்லியன் சந்தாதாரர்களை அனைத்துலக அளவில் தனது சேவைகளில் இணைத்துக் கொள்ள நெட்பிலிக்ஸ் இலக்கு கொண்டுள்ளது.

மூன்றாவது காலாண்டில் மொத்தம் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக நெட்பிலிக்ஸ் ஈட்டியது.

இதன் மூலம் 665 மில்லியன் டாலர் இலாபத்தைக் கண்ட நெட்பிலிக்ஸ் இரண்டாவது காலாண்டில் 271 மில்லியன் டாலரை மட்டுமே இலாபமாக ஈட்டியது.

சிறப்பாக வணிக ரீதியில் நடைபோட்டாலும், அடுத்தடுத்த மாதங்களில் அமேசோன் பிரைம், டிஸ்னி போன்ற நிறுவனங்களிடமிருந்து மேலும் கடுமையான போட்டிகளை நெட்பிலிக்ஸ் எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவிலும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.