Home One Line P2 ஹீரோ: சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன்!

ஹீரோ: சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன்!

1020
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கிய ஹீரோ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நடிகர் விஷாலை வைத்து இரும்புத் திரை எனும் ஒரு பெரிய வெற்றிப்படத்தை வழங்கிய மித்ரன் சிவகார்த்திகேயனுக்கு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் அர்ஜுனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டக் காணொளி கடந்த வியாழக்கிழமை பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று ஊகிக்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: