Home One Line P1 தஞ்சோங் பியாய்: “பிரதமரே மறுசுழற்றியில் வந்தவர்தான், வேட்பாளர்கள் மறுசுழற்றி செய்யப்படுவது பிரச்சனை இல்லை!”- அனுவார் மூசா

தஞ்சோங் பியாய்: “பிரதமரே மறுசுழற்றியில் வந்தவர்தான், வேட்பாளர்கள் மறுசுழற்றி செய்யப்படுவது பிரச்சனை இல்லை!”- அனுவார் மூசா

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிமறுசுழற்சி வேட்பாளரைநிறுத்தியதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா அவற்றை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய பிரதமரும்மறுசுழற்சி செய்யப்பட்டவர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரவாயில்லை, நம் பிரதமர் பல முறை மறுசுழற்சி செய்யப்பட்டவர். இது ஒரு பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிரதமரைக் கொண்டிருக்க முடிந்தால், அவ்வாறான வேட்பாளர் இருப்பதில் என்ன தவறு?” என்று நாடாளுமன்ற வளாகத்தில் அனுவார் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கு மசீச வேட்பாளர் வீ ஜெக் செங்கை தேசிஉஅ முன்னணி நிறுத்துவதாக நேற்று புதன்கிழமை அறிவித்திருந்தது. கடந்த 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் 524 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் வீ இரண்டு முறை தஞ்சோங் பியாய்யில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதியன்று பிரதமர் துறை துணை அமைச்சரான பாரிட் காலமானதைத் தொடர்ந்து தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தஞ்சோங் பியாய் பெர்சாத்து கட்சித் தலைவர் கர்மெய்ன் சர்டினியை தனது வேட்பாளராக நிறுத்துவதாக நம்பிக்கைக் கூட்டணி அறிவித்திருந்தது.

வருகிற சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெறும் வேளையில், நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.