Home One Line P2 அட்லி- ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் ‘சங்கி’யா?

அட்லி- ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் ‘சங்கி’யா?

1313
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்படவுலகில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்  அட்லி கூட்டணியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேலாகவே வசூல் குவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி மற்றும் ஷாருக்கான் இணைந்து பணியாற்றும் புதிய படத்திற்கு சங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கி என்ற பெயர் தற்போது டுவிட்டரில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்குனராக அட்லி திகழ்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி, தற்போது, மூன்றாவது படமான பிகில் படமும் வெளிவந்துள்ளது.

இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறதுஇப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ள  நிலையில், தமிழ்இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.