Home One Line P1 தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து கெந்திங் மலையில் நிலச்சரிவு!

தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து கெந்திங் மலையில் நிலச்சரிவு!

743
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை கெந்திங் மலையில் உள்ள அம்பர் கோர்ட் தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று மாலை 5.40 மணியளவில் இது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கெந்திங் மலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் யூஸ்ரி அப்துல்லா சானி தெரிவித்தார்.

மாலை 5.40 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​மண் சரிந்து இடிந்து விழுந்ததைக் கண்டோம். நிலச்சரிவு அம்பர் கோர்ட் சாலைக்கும், கிராண்ட் அயன் டி எலெமன் தங்கும் விடுதிக்கும் இடையில் உள்ள இரு வழிச்சாலையை முடக்கியது.” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நேற்றிரவு 12:40 மணியளவிலும் மீட்புப் பணிகள் தொடர்வதை அவானி செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பணிகளை தீயணைப்பு மீட்புக் குழுவினர் பின் தொடர்ந்து செல்லும் காட்சிகளும் ஒரு காணொளியில் இடம்பெற்றுள்ளது. ஒரு சிலர் சுமார் 3 மணி நேரங்களுக்குப் பிறகே தங்கும் விடுதியை அடைய முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரு பேருந்தின் முன் மண் சரிந்து விழும் காணொளி பரவலாக சமூகப் பக்கங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.