Home One Line P2 விடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது!

விடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது!

1133
0
SHARE
Ad

இலண்டன்: இலண்டனில் குடியிருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் தொடர்பாக 12 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மலேசிய காவல் துறையின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இலண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் நேற்று புதன்கிழமை அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) இன் கீழ் தனிநபர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசிய காவல் துறையினரால் விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட விவகாரம் ஆதாரமற்றது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று அவர்கள் அட்டைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மலேசிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தும் அமைப்பாக நடவடிக்கை எடுத்தது பொய்யானது. 2009-ஆம் ஆண்டு முதல் புலிகள் செயலற்ற நிலையில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, மலேசிய காவல் துறையின் இந்நடவடிக்கைகள் மிகவும் வேடிக்கையானவைஎன்று பங்கேற்பாளர்களில் ஒருவரான பிரசாந்த் பாஸ்கரன் மலேசியாகினியிடம் தெரிவித்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

தனிநபர்களைக் கைது செய்வதை மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களையும் தாங்கள் எதிர்ப்பதாக பிரசாந்த் கூறினார்.

உண்மையில், முஸ்லிம் சமூகம் உட்பட உலகளவில் எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.