Home One Line P1 உத்துசான் மலேசியா பத்திரிக்கை புத்தாண்டில் மீண்டும் வெளிவரலாம்

உத்துசான் மலேசியா பத்திரிக்கை புத்தாண்டில் மீண்டும் வெளிவரலாம்

668
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – மூடப்பட்ட மலாய் நாளிதழான உத்துசான் மலேசியா மீண்டும் எதிர்வரும் புத்தாண்டில் வெளிவரலாம் என துணையமைச்சர் ரிட்சுவான் யூசோப் தெரிவித்திருக்கிறார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் ரிட்சுவான் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

பிரச்சாரக் கூட்டத்தின்போது பத்திரிகையாளர்களை நோக்கி உத்துசான் மலேசியா நிருபர் யாராவது வந்திருக்கிறீர்களா எனக் கேள்வி கேட்க, அதைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்து நிருபர் ஒருவர் அக்டோபர் 9-ஆம் தேதியே அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அப்போது உத்துசான் முழுமையாக மூடப்படவில்லை என்றும் இறைவன் அருளால் மீண்டும் புத்தாண்டு வாக்கில் அந்தப் பத்திரிக்கை வெளிவரும் என்றும் ரிட்சுவான் யூசோப் தெரிவித்திருக்கிறார்.

அதற்காக முன்னோட்டப் பணிகள் நடந்து வருவதாகவும் கூறிய அவர், உத்துசான் வெளிவந்தால் அரசாங்கத்தின் பணிகளையும், கொள்கைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் அது பங்காற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அச்சு நாளிதழ்கள் கடுமையான வணிகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. 80 ஆண்டுகள் பழமையான உத்துசான் இந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. அதை விடப் பழமையான – நூறாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்த – தமிழ் நேசன் தமிழ் நாளிதழும் இந்த ஆண்டுதான் மூடுவிழா கண்டது.

அதைப் போன்றே பழமையான நாளிதழான மலாய் மெயில் பத்திரிகையும் இந்த ஆண்டு அதன் அச்சுப் பதிப்பு நிறுத்தப்பட்டு, தற்போது இணைய ஊடகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.