Home One Line P2 வி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்!

வி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்!

877
0
SHARE
Ad

சென்னை: புதுமுக இயக்குனர் பவெல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வி1 (V1). திகிலும் மர்மமும் கலந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.

இப்படத்தைப் பார்த்த இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், சமுத்திரக்கனி, சசிகுமார் வெகுவாக  பாராட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் புதுமுக நடிகர் ராம் அருண் கெஸ்ட்ரோ மற்றும் விஸ்ணுபிரியா பிள்ளை ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், காயத்ரி, லிஜீஷ் மற்றும் மிமி கோபி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அடுக்குமாடி குடியிருப்பில் வி-1 என்ற எண் கொண்ட வீட்டில் நடந்த கொலைக் குறித்த புலனாய்வுத் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று திரைப்படக் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி1 திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: