Home One Line P2 கோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிகாந்த் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதைப் பெற்றார்!

கோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிகாந்த் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதைப் பெற்றார்!

644
0
SHARE
Ad

கோவா: இந்திய திரைப்பட உலகின் புகழ்பெற்ற நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த ஆண்டு நடைபெற்று வரும் அனைத்துலக திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஐ) ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

போலிவுட் நடிகர் அமிதாப் பட்சன் அவ்விருதினை வழங்க, 50-வது அனைத்துலக திரைப்பட விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகார் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றார்.

ரஜினிகாந்த் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவுக்கு பங்களிப்பு செய்த ரஜினிகாந்துக்கு ஒரு நிலையான மரியாதையாக இது அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு ஐஎப்எப்ஐயில் ரஜினிகாந்திற்குஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என்று கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பிரகாஷ் ஜவடேகார் அறிவித்திருந்தார்.

இந்த அங்கீகாரத்திற்காக தமது நன்றியை ரஜினிகாந்த் தெரிவித்துக் கொண்டார்.

ரஜினிகாந்த் 44 ஆண்டுகளுக்கும் மேலாக 206 படங்களில் பணியாற்றியுள்ளதாக ஐஎப்எப்ஐ தெரிவித்துள்ளது. 1975-ஆம் ஆண்டில் இயக்குனர் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பத்ம பூஷண் (2000) மற்றும் பத்ம விபூஷண் (2016) உள்ளிட்ட பல விருதுகளையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.