Home One Line P2 ஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்!

ஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்!

1185
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாறுபட்ட கோணத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தின் புதிய தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடொயோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு எதிராக நடிகர் அர்ஜுன் நடித்திருப்பார். ஆயினும், இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு உதவும் வகையில் அர்ஜுன் நடித்திருப்பதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து, சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ உடை மற்றும் முகமூடியோடு இருக்கும் புதிய படம் வெளியிடப்பட்டுள்ளது.