Home One Line P2 ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்!

ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் 101-வது வயதில் காலமானார்!

775
0
SHARE
Ad

தோக்கியோ: ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசோன் தனது 101 வயதில்காலமானார்.

நகசோன் கடந்த நவம்பர் 1982 முதல் நவம்பர் 1987 வரை பிரதமராக பணியாற்றினார்.

ஜப்பானின் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளித்த அரசியல்வாதியான நகசோன் தோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குப் பிறகு காலமானார் என்று இங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

அரசியலில் ஒரு வலுவான நபராக பரவலாகக் கருதப்பட்ட நகசோன், இராஜதந்திரத்தைப் பொறுத்தவரை, 1980-களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.

தனது பதவிக் காலத்தில், ஜப்பானின் தேசிய இரயில்வே அமைப்பை தனியார்மயமாக்குவதற்கு அவர் ஒரு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். மேலும் ஜப்பானின் சமாதான அரசியலமைப்பை திருத்துவதற்கான ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.

1918-இல் குன்மா ப்ரிபெக்சரின் தகாசாகி நகரில் பிறந்த நகசோன், 1947-இல் அரசியலில் நுழைந்தார். ஜப்பானின் பிரதிநிதிகள் சபையில் அல்லது நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஓர் இடத்தைப் பெற்றார். தொடர்ந்து 20 தேர்தல்களுக்கு தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.