Home One Line P2 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்!

779
0
SHARE
Ad

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், நடப்பு அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்கொள்வதாக இருந்த, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், நேற்று செவ்வாய்க்கிழமை, அதிலிருந்து விலகிக் கொள்வதாக தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

“இது என் வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றாகும்என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது ஆதரவாளர்களான உங்களுக்கு, எனது பிரச்சாரத்தை இன்று நான் இடைநிறுத்திக் கொண்டிருக்கிறேன் என்பது ஆழ்ந்த வருத்தத்தோடுஆழ்ந்த நன்றியுணர்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்: நான் இனி அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றாலும், டொனால்டு டிரம்பை தோற்கடித்து, நம் நாட்டின் எதிர்காலத்துக்காக போராடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ், 51, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த செனட் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், செனட் உறுப்பினராக வெற்றி பெறுவது, இதுவே முதன்முறையாகும்.