Home One Line P2 அருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

அருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

750
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புரொடாக்‌ஷன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன.

அந்த வெற்றிகளைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படமாகவாழ்என்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தயாராகி உள்ளது.

இத்திரைப்படத்தினை அருவி திரைப்பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். இப்படம் மிகப் பெரிய அளவில் எதார்த்த திரைப்பட இரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தில் பிரடிப் அந்தோணி, பானு, ஆரவ், டிவா டவான் , நித்யா, ஶ்ரீரா, இன்மொழி, மயூரா ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஷெல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வேலைகளை மேற்கொள்கிறார். இதற்கிடையே, இப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: