Home One Line P1 “கிறிஸ்துமஸை அடுத்து, சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார்!”- ராயிஸ்...

“கிறிஸ்துமஸை அடுத்து, சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார்!”- ராயிஸ் யாத்திம்

2325
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பழைய டுவிட்டர் பதிவு ஒன்று சமூகப்பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

பணமோசடி மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் தீவிரவாதத்தைத் தூண்டியதற்காக இந்தியாவின், தேடப்படும் பட்டியலில் உள்ள ஜாகிர், முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கக்கூடாது என்று கடந்த 2016-ஆம் ஆண்டு தமது டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்“.

#TamilSchoolmychoice

தயவுசெய்து இதைத் தவிர்க்கவும் என் அன்பான முஸ்லிம் நண்பர்களே. இது ஒரு பெரிய பாவம். மறு டுவிட் செய்து செய்தியை பரப்புங்கள்.”  என்று அப்பதிவில் குறிப்பிட்டிருந்தது.

கூடுதலாக, ஜாகிரின் இணையத் தொலைக்காட்சித் தளமானபீஸ் டிவி’யிலும் அதே செய்தியைக் கொண்ட காணொளி பரப்பப்பட்டது.

இது குறித்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ராயிஸ் யாத்திம், ஜாகிர் நாயக்கின் இந்த பதிவுக்கு தமது மறுப்பைத் தெரியப்படுத்தியுள்ளார். 

இது ஜாகிர் கூறியதாக இருந்தால், இந்நாட்டின் அனைத்து முப்திகளும் உங்கள் ஓய்வூதிய சலுகைகளை சேகரித்து வைத்து ஓய்வு பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்து அவர் சீனப் பெருநாள் மற்றும் தீபாவளி போன்றவற்றிலும் இம்மாதிரியான தடைகளைக் கூறலாம். அவரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் மறுபடியும் சொல்கிறேன். உள்துறை அமைச்சில் யாராவது ஜாகிர் நிரந்தர குடியுரிமையை எவ்வாறு பெற்றார் என்பதைக் கூற இயலுமா?” என்று அவர் சாடியுள்ளார்.