Home One Line P1 “தூய்மையான பினாங்கு தைப்பூசம் 2020” – தன்னார்வலர்களுக்கு அழைப்பு

“தூய்மையான பினாங்கு தைப்பூசம் 2020” – தன்னார்வலர்களுக்கு அழைப்பு

1038
0
SHARE
Ad

ஜோர்ஜ்டவுன் – எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூசத்தைத் தூய்மையான முறையில் கொண்டாட, மலேசிய தமிழர் குரல் இளைஞர் பகுதி மற்றும் பினாங்கு தமிழர் குரல் இணைந்த ஏற்பாட்டில் “#தூய்மையான_பினாங்கு_தைப்பூசம்’ எனும் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான தன்னார்வலர்களுக்கான அழைப்பை அந்த இரண்டு இயக்கங்களும் விடுத்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக (2018 முதல்) இந்த சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வருகின்ற 2020 ஆண்டு பினாங்கு தைப்பூசதை முன்னிட்டு தன்னார்வலர்களை (volunteer) எதிர்பார்ப்பதாக அந்த இரு இயக்கங்களும் ஊடக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

“அடுத்த ஆண்டு தைப்பூசத்தை தூய்மையான ஒன்றாக மாற்றுவதில் அதீத பற்றுள்ள மற்றும் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை நாங்கள் தேடுகிறோம். உங்கள் ஆதரவு இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாது” என தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ள அந்த அமைப்புகள் கீழ்க்காணும் நேரம், தேதிகளில் இந்த தூய்மை இயக்கம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

நாள் : 07 – 08 பிப்ரவரி 2020
இடம் : தண்ணீர்மலை கணேசர் ஆலயம்
நேரம் : மாலை 6.00 – மாலை 6.00 (24 மணிநேரம்)

இந்த சேவை இயக்கம் கடந்த ஆண்டுகளைப்போல் இவ்வாண்டும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால், இதை ஒரு கடமையாக கருதும் சமூக பொறுப்புள்ளவர்களை தன்னார்வ துப்புரவு பணியை செவ்வனே செய்யக்கூடியவர்களையும் தேடுவதாக மலேசிய தமிழர் குரல் இளைஞர் பகுதி மற்றும் பினாங்கு தமிழர் குரல் அமைப்புகள் தங்களின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளன.

தீவிரமான தன்னார்வலர்கள் மட்டுமே தேவை

பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், மேலும் ஒரு சிறப்பு சட்டை அன்றைய தினம் விநியோகிக்கப்படும். மேலும் தகவலுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபருடன் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

பதிவு செய்ய புலனம் வழி
தொடர்பு கொள்ளவும் :

திரு. கோகிலன் 011-2432 0602 (http://www.wasap.my/+6011-24320602/KeepCleanPenangThaipusam2020)

நமது தைப்பூசம்,
நமது பொறுப்பு.

பதிவுக்கு இறுதி நாள் :
20 ஜனவரி 2020