Home One Line P1 “மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்!”- துன் மகாதீர்

“மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்!”- துன் மகாதீர்

658
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார். சிலர் இன்னும் முன்னேற மறுக்கும் அரசியல் கொள்கைகளில் சிக்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.

விடாமுயற்சி, ஒழுக்கம், சுகாதாரம், சகிப்புத்தன்மை, மரியாதை, மொழி மற்றும் நல்ல மனப்பான்மை போன்ற மதிப்புகள் முன்னேறாதவர்களிடமிருந்தும் பின்தங்கியவர்களிடமிருந்தும் நம்மை வேறுபடுத்துகின்றனஎன்று அவர் தெரிவித்தார்.

இந்த நற்பண்புகள் எல்லா கலாச்சாரங்களிலும், மதங்களிலும் உள்ளன, எனவே மலேசியாவின் பன்முகத்தன்மை அந்த மதிப்புகளைப் பற்றி நமக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்என்று மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

மக்கள் அரசியல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், உலகம் வேகமாக நகர்கிறது என்று பிரதமர் கூறினார். இதன் விளைவாக, விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைவருக்கும் எளிதான பயணத்தை உறுதிப்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்பவர்கள் ஏற்கனவே வேலைகளையும் வருமானத்தையும் தேடுகிறார்கள். மாறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டனர், “என்று அவர் கூறினார்.

பன்முகத்தனமை நிரம்பிய இந்நாட்டில் அமைதியான வாழ்க்கை வாழ்வதையும் மகாதீர் குறிப்பிட்டுக் கூறினார். ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் அல்லது புலம்பெயர்ந்தோரை தனிமைப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஒருபோதும் முன்வரவில்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

பூமிபுத்ரா மக்களுக்கு சில முன்னுரிமைகள் இருந்தாலும், அது அவர்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதே தவிர மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பது இல்லை

நாட்டின் செல்வம் பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அது பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களிடம் பகிரப்பட்டு உள்ளது என்பதை நாம் காண்கிறோம்,” என்று அவர் கூறினார்.