Home One Line P2 அமெரிக்காவும், சீனாவும் வணிக யுத்த பதட்டங்களைக் குறைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

அமெரிக்காவும், சீனாவும் வணிக யுத்த பதட்டங்களைக் குறைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

571
0
SHARE
Ad

வாஷிங்டன்: வணிக யுத்த பதட்டங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களில் அமெரிக்காவும் சீனாவும் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவிற்கும் இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்று ஒப்பந்தமாகும், இது அமைதிக்கு வழி வகுக்கும்.”

#TamilSchoolmychoice

வட கொரியாவுடன், சீனா எங்களுக்கு உதவுகிறது. சீனா பல விஷயங்களில் உதவுகிறது. சீனாவுக்கும், அதிபர் கிம் ஜாங் உனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.”

இது நான் பார்த்த மிகச் சிறந்த நிலைமைஎன்று டிரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று சீனா விவரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இறக்குமதியை 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாகவும், அறிவுசார் சொத்து விதிமுறைகளை வலுப்படுத்துவதாகவும் சீனா உறுதியளித்துள்ளது.

இதற்கு ஈடாக, சீன தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட சில புதிய கட்டணங்களை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

2018 முதல், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங், இரு நாடுகளிலும் 450 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள தயாரிப்புகளை உள்ளடக்கிய இறக்குமதி வரி வணிகத் தகராறில் ஈடுபட்டன.