Home One Line P2 ’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா!

’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா!

807
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ஜீவா முதன் முறையாக இந்தியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ’83’.

இப்படம் இந்திய மட்டைப் பந்து (கிரிகெட்) விளையாட்டு வீரர் கபில்தேவ் வாழ்க்கையைப் பற்றியதாகும், இப்படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியாகியராம்திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஜீவா ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலமாக சிறப்பான நடிப்பை ஜீவா வழங்கியிருந்தார். 

#TamilSchoolmychoice

தமிழகத்திற்கு ஓர் அடையாளமாய் மட்டைப்பந்து விளையாட்டில் புகழுடன் விளங்கிய ஆளுமைகளுள்  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிக முக்கியமானவர்.

கடந்த 1983-ஆம் ஆண்டு உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதையை சொல்லும் ’83’ படத்தில் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ளார்.