Home கலை உலகம் பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?

பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?

565
0
SHARE
Ad

Rajini-photoசென்னை, ஏப். 8- ரஜினி ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்வது வழக்கம். தனது படங்கள் ரிலீசாகும் போது இந்த பயணத்தை மேற்கொள்வார். இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் சென்றதுமே காவி வேட்டி சட்டைக்கு மாறி விடுவார். பக்தர்களோடு பக்தராக நடந்து செல்வார். வழியில் உள்ள டீ கடைகளில் உட்கார்ந்து டீ குடிப்பார்.

பாபாஜி குகை கோவிலுக்குள் சென்று தவம் இருப்பார். நதிகளில் குளிப்பார். இரண்டு வாரம் அங்கு இருந்து விட்டு சென்னை திரும்புவார். ரஜினியுடன் நெருங்கிய நண்பர்கள் செல்வது உண்டு. 1996-ல் இருந்து இருபது வருடங்களாக இமயமலை சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடைசியாக எந்திரன் படம் ரிலீசான போது சென்றார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இமயமலை போகவில்லை. இந்த வருடம் அங்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோச்சடையான் படம் ரிலீசாவதையொட்டி இப்பயணத்தை துவங்குகிறார். இதற்காக டாக்டர்களிடம் அனுமதி கேட்டுள்ளராம். முன்பை விட ரஜினி ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர் – நடிகைகள் உண்ணாவிரத போராட்டத்திலும் பங்கேற்றார்.

#TamilSchoolmychoice

கோச்சடையான் படத்துக்கு டப்பிங் பேசியும் முடித்துள்ளார். இமயமலை சென்று வந்த பிறகு அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது புதுப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார், கே.வி. ஆனந்த் ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என தெரிகிறது.