Home One Line P2 உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்!

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்!

916
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளாவிய கருத்துக்களின் அடிப்படையில் 73 நாடுகளை அடக்கியுள்ள உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை யூஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் (US News & World Report) ஐந்தாவது ஆண்டு வெளியிட்டுள்ளது.

யுஎஸ் நியூஸ், பிஏவி குழுமம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியுடன் கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டையும் 65 பண்புகளில் ஒன்பது துணைப்பிரிவுகளாக தொகுத்துள்ளன.

36 நாடுகளைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்டோர் இதில் கணக்கெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தரவரிசைகளை நிர்ணயிக்கும் போது தொழில்முனைவோர் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முதல் 17 நாடுகளில் பத்து நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன. சுவிட்சர்லாந்து தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து முதல் ஐந்து இடங்களில் முதல் முறையாக வெளியேறி உள்ளது. கனடா, ஜப்பானுக்கு பதிலாக 2-வது இடத்தில் இடம் பெற்றது.

அனுபவங்கள், குடியுரிமை, கலாச்சார செல்வாக்கு, தொழில்முனைவு, பாரம்பரியம், போக்குவரத்து, வணிகக் கொள்கை, அதிகாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் என ஒன்பது துணைப்பிரிவுகளாக நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

மலேசியா 32-வது இடத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், அண்டை நாடான சிங்கப்பூர் 16-வது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இந்தியா 25-வது இடத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.