Home One Line P2 திமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன

திமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன

696
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில நாட்களாக முட்டலும் மோதலுமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக-காங்கிரஸ் தலைவர்கள் இன்று சனிக்கிழமை நேரடி சந்திப்புகளின் மூலம் சமாதானமாகி மீண்டும் கைகோர்த்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.

இன்று சனிக்கிழமை (ஜனவரி 18) காலையில் பாண்டிச்சேரியின் காங்கிரஸ் கட்சி முதல்வர் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது குழுவினருடன் அண்ணா அறிவாலயம் வந்து ஸ்டாலினைச் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து கூட்டணி பற்றி இருதரப்பு கட்சிகளில் இருந்தும் யாரும் பேசமாட்டார்கள் என ஸ்டாலின் அறிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இருந்த பிணக்கு தீர்ந்தது என்றும் இனி இரு கட்சிகளும் இணைந்து இனி செயல்படும் என்றும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தனர்.

ஸ்டாலினுடன் என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு “முக்கியமாக ஒன்றும் பேசவில்லை. தர்பார் படத்தைப் பற்றிப் பேசினோம்” என்று கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இரு கட்சிகளும் மீண்டும் இணைந்ததுபோல் தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இதனால் அந்தக் கட்சிகளின் தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் மனக் கசப்பும், உரசல்களும் அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்து விடாது என்றும், நீறு பூத்த நெருப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.