Home One Line P2 உலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்!

உலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்!

982
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸின் பரவல் விளைவாக சீனாவில் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் அந்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட தொற்று நோய்கள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, குறிப்பாக இந்த பண்டிகை காலங்களில், கிருமி பரவுவதைத் தடுக்க வுஹான் மக்களை தற்காலிகமாக இப்பகுதியை விட்டு வெளியேற சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி பேருந்துகள், இரயில்கள் மற்றும் படகுகள் போன்ற அனைத்து பொது போக்குவரத்தையும் நிறுத்தி வைப்பதும் இதில் அடங்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஹூபே பகுதியில் சமீபத்திய இறப்பு விகிதங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

நேற்று புதன்கிழமை, சீன தேசிய சுகாதார ஆணையம் குறைந்தது ஒன்பது பேர் கொரொனா வைரஸால் இறந்துவிட்டதாக அறிவித்தது. சுவாசக்குழாய் மூலமாக இந்நோய் தொற்றுவதாக கூறப்படுகிறது.

“அனைத்துலக பொது சுகாதார அவசரநிலைஎன்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு கடந்த புதன்கிழமை தனது முடிவை வியாழக்கிழமை வரை தாமதப்படுத்தியது.

உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின் கூற்றுப்படி, அந்த முடிவை எடுக்க அவர்களிடம் இன்னும் போதுமான தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பல உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் தகவல் சேகரிப்புக்காக சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை ஓர் அறிக்கை இது குறித்து வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.