Home நாடு “இனியும் வேதமூர்த்திக்கு ஹிண்ட்ராப்பை வழிநடத்தத் தகுதியில்லை” – ஜெயதாஸ் காட்டம்

“இனியும் வேதமூர்த்திக்கு ஹிண்ட்ராப்பை வழிநடத்தத் தகுதியில்லை” – ஜெயதாஸ் காட்டம்

530
0
SHARE
Ad

jayathasகோலாலம்பூர், ஏப்ரல் 19- வேதமூர்த்தி இனியும் ஹிண்ட்ராப் சார்பாக செயல்படத் தகுதியானவர் அல்ல என்று தற்போது பிகேஆரில் இருக்கும்  ஹிண்ட்ராப்பைச் சேர்ந்த எஸ்.ஜெயதாஸ் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி மற்றும் ஹிண்ட்ராப் இடையேயான உறவின் முன்னேற்றம் இந்த இயக்கத்திற்கும், இந்திய சமூகத்தினருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஏமாற்று வேலை என்று ஜெயதாஸ் தெரிவித்திருக்கிறார்.

அம்னோ இன்னும் மாறவில்லை

உண்மையான ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலையாய நோக்கமே தேசியமுன்னணியைப் பதவியில் இருந்து இறக்குவதே என்று தெரிவித்த அவர், கடந்த 56 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இந்தியர்களை ஏமாற்றி முடக்கிவைத்ததும், முக்கியத்துவம் குறைந்த நிலையில் வைத்திருந்தும் தான் தேசியமுன்னணி இந்தியர்களுக்குச் செய்ததாகும் அவர்கள் மாறவுமில்லை, தங்களை மாற்றிக்கொள்ளவுமில்லை என்று ஜெயதாஸ் தெரிவித்தார்.

சுல்கிப்ளி இந்தியர்களையும், அவர்கள் சமயத்தையும் இழிவுபடுத்தி விமர்சனம் செய்த இரண்டு காணொளிக் காட்சிகள் வெளியாகியும், நஜிப் அவரை ஷாஆலம் வேட்பாளராக அறிவித்திருப்பதும், இன்னமும் தேசியமுன்னணி இந்தியர்களுக்கு உதவும் என்பது போல பாசாங்கு செய்து வேதமூர்த்தி செயல்படுவதையும் ஜெயதாஸ் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஹிண்ட்ராப் போன்ற ஒரு மக்கள் சக்தி இயக்கத்தை வேதமூர்த்தி போன்ற அம்னோ ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அழிக்க இடங்கொடுக்கமாட்டோம் என்றும் ஜெயதாஸ் கூறினார்

ஹிண்ட்ராப்பின் நோக்கமே தேசியமுன்னணியை அதிகாரத்திலிருந்து நீக்குவதாகும்

ஹிண்ட்ராப்புக்கும், நஜிப்பிற்கும் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு, அவ்வியக்கத்திற்கு ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கருத்துத்தெரிவித்தார்.

மேலும் வேதமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் செய்துள்ள செயல், நாடெங்கிலும் உள்ள இந்திய மக்களுக்கு எதிரானது என்றும் ஜெயதாஸ் குறிப்பிட்டார்.

இந்த இயக்கத்தை வழிநடத்தவும், அதன் நியாயமான கொள்கைகளைக் காப்பாற்றும் நோக்கத்திலும் தாங்கள் ஒரு தற்காலிக செயற்குழுவை உருவாக்கியுள்ளதாகவும், அக்குழு தனது செயல்திட்டங்கள் மூலம் தேசியமுன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றும் விதமாக தொடர்ந்து செயல்படும் என்றும் ஜெயதாஸ் உறுதியளித்தார்.