Home கலை உலகம் இன்று விசாரணை விஸ்வரூபம் தடை நீங்குமா?

இன்று விசாரணை விஸ்வரூபம் தடை நீங்குமா?

635
0
SHARE
Ad

சென்னை, ஜன.28-விஸ்வரூபம் படம் திரையிட தடை நீக்கப்படுமா என்று இன்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்படும் என தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் போலீசாரிடமும் தமிழக அரசிடமும் புகார் மனு கொடுத்தனர். இதனால் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். அப்போது, விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. முஸ்லிம் அமைப்பு சார்பாக படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, படத்தை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி இந்த படத்தை நீதிபதி நேற்று முன்தினம் பார்த்தார். இந்த வழக்கு இன்று பகல் 12 மணிக்கு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வருகிறது. எனவே விஸ்வரூபம் படம் திரையிட அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரியும்.