Home நாடு பினாங்கு வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் காரணமல்ல – அன்வார்

பினாங்கு வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் காரணமல்ல – அன்வார்

322
0
SHARE
Ad

anwar-angry-sliderபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 – தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்வார் கூறுகையில், “இவ்வெடிப்பு சம்பவத்திற்கு அன்வார் தான் காரணம் என்று தேசிய முன்னணி என் மீது பழி சுமத்துவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

அதே நேரத்தில் நாங்களும் காவல்துறையுடன் சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களை தேடி கண்டுப்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒருவேளை இச்சம்வத்தை செய்தவர்கள் பக்காத்தானின் ஆதரவாளர்களாக இருந்தால் நாங்கள் அவர்களை பாதுகாக்க மாட்டோம் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு 10.15 மணியளவில் நிபோங் திபால் வட்டாரத்தில்  பினாங்கு மாநில கெராக்கான் தலைவரும், பினாங்கு மாநில தே.மு.தலைவருமான டத்தோ டாக்டர் தெங் ஹோக் நான் பிரதான மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் குவிக்கப்பட்டிருந்த பொருட்களில் இருந்து அந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.