Home கலை உலகம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படத்தின் 1 மணி நேர காட்சிகளை நீக்க அதிகாரிகள் கெடுபிடியா?

தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படத்தின் 1 மணி நேர காட்சிகளை நீக்க அதிகாரிகள் கெடுபிடியா?

662
0
SHARE
Ad

SLIDER KAMALசென்னை: ஜனவரி 29 – விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்குகள் சேன்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.

நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக சுமுக தீர்வு காணுங்கள் என்று கமலுக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து படத்துக்கு 15 நாள் அரசு தடை விதித்தது. இதை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். 26ம் தேதி படத்தை பார்த்தார்.

இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடக்கும் விசாரணையின் முடிவுக்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என்பது தெரிய வரும்.