Home இந்தியா நேதாஜி மரணத்தில் உண்மைகள் வெளிவரவில்லை-மகள் கூறுகிறார்

நேதாஜி மரணத்தில் உண்மைகள் வெளிவரவில்லை-மகள் கூறுகிறார்

672
0
SHARE
Ad

Nethaji-Sliderகோல்கட்டா, ஜனவரி 29 – “நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களுக்கு, மத்திய அரசிடமிருந்து, ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால், இந்த விஷயத்தில், உண்மைகள் வெளிவரவில்லை,” என, சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின் மகள், அனிதா போஸ் கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். நாட்டின் விடுதலைக்காக, இந்திய தேசிய ராணுவம் என்ற படைப் பிரிவை உருவாக்கியவர். 1945, ஆக., 18க்கு பின், நேதாஜியை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

விமான விபத்தில் இறந்து விட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனாலும், நேதாஜி எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்ற விவரங்கள், மர்மமாகவே இருந்தன. இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்காக, 1956, 1970 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில், விசாரணை கமிட்டிகள் அமைக்கப்பட்டன.முதல் இரண்டு விசாரணை கமிட்டிகளும், நேதாஜி, விமான விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தன.

#TamilSchoolmychoice

மூன்றாவது கமிட்டி, இதுதொடர்பாக, தைவானில் சென்று விசாரணை நடத்தியதாகவும், குறிப்பிட்ட நாளில், அப்படி ஒரு விமான விபத்து எதுவும் நிகழ வில்லை என்றும், தைவான் அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேதாஜியின் மகள், அனிதா போஸ், கூறியுள்ளதாவது:நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, மூன்று விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த மூன்று விசாரணை குழுக்களுக்கும், அப்போது ஆட்சியில் இருந்த, மத்திய அரசுகளால், போதிய அளவில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கவில்லை என்ற, முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

அரசின் ஆதரவு கிடைத்திருந்தால், நேதாஜி எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய, விவரங்கள் தெரிந்திருக்கும்.இவ்வாறு அனிதா போஸ் கூறினார்.