Home இந்தியா அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு- ஜெயலலிதா

அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு- ஜெயலலிதா

391
0
SHARE
Ad

jeyaசென்னை, மே 3- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயன் அடைவர். அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1- ஆம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

#TamilSchoolmychoice

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இப்போதுள்ள 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுபோன்று, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு சதவீதம் உயர்த்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயன் அடைவர். அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1- ஆம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,639.93 கோடி செலவாகும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.