Home இந்தியா மகளிர் உலகக் கிண்ணம் ஆரம்பம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

மகளிர் உலகக் கிண்ணம் ஆரம்பம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

782
0
SHARE
Ad

Women-Hockey-Sliderஜனவரி 31 – மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) சார்பில் 10வது மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இன்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. “ஏ” பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன. “பி” பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன.

#TamilSchoolmychoice

பாதுகாப்பு பிரச்னை காரணமாக பாகிஸ்தான் அணி இடம் பெற்றுள்ள “பி” பிரிவு போட்டிகளை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது. “ஏ” பிரிவு போட்டிகள் திட்டமிட்டபடி மும்பையில் நடக்கிறது.

எட்டு அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

பின்பு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் “சூப்பர் சிக்ஸ்” சுற்றுக்கு முன்னேறும். இதில், “ஏ” பிரிவில் உள்ள அணிகள் “பி” பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

முடிவில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 17ம் திகதி மும்பையில் நடக்கும் இறுதிச் சுற்றில் விளையாடும்.

இந்திய அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாட இருப்பது சாதகமான ஒன்றாகும். சமீபத்திய பயிற்சி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்திய அணியில் அணித்தலைவி மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, பூனம் ராத், அமிதா சர்மா, ஹர்மன்பிரீத் கவுர் போன்ற மூத்த வீராங்கனைகள் நிறைய இடம் பெற்றுள்ளது பலம். பந்து வீச்சில் நாகராஜன் நிரஞ்சனா, கவுகர் சுல்தானா இருப்பது வலு சேர்க்கிறது.

ஒவ்வொரு அணியிலும் திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதால் ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும். சாம்பியன் பட்டம் வெல்ல எந்த ஒரு அணியும், வெற்றியை எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால், அனல் பறக்கும் போட்டியை காணலாம்.